திருமா – CM விஜய் உறவில் விரிசல்… தவெகவின் சைலண்ட் மூவ்…. அதிர்ச்சியில் விசிக…. திடீர் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

கூட்டணி தொடர்பாகத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விசிக மாநாட்டில் வெளிப்படையாக அறிவித்து, தமிழக வெற்றிக் கழகத்துடன் இனி இணைந்து பயணிப்போம் எனக் கூறியிருந்த நிலையில், தவெக தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் வராதது விசிகவினரிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமாவின் இந்த அறிவிப்பை வரவேற்று முதல்வர் விஜய்யோ அல்லது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமைதி காத்து வருவது, இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.