உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவைச் சேர்ந்த அன்கூர் சிங் என்ற இளைஞர், தன் மீது சுமத்தப்பட்ட பொய் எஸ்சி/எஸ்டி வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வேதனை தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிரிழப்பதற்கு முன்பாக பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், எஸ்சி/எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கவும் அல்லது வழக்கைத் திரும்பப் பெறவும் தன்னிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டுச் சிலர் மிரட்டியதாக அன்கூர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இளைஞர் தற்கொலை செய்துகொண்ட போதிலும், அவர் மீதும் அவரது தந்தை மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் நீதி விசாரணை கோரியும் குரல் எழுப்பி வருகின்றனர்.
