யாருக்குமே தெரியாத உண்மை….. “என் மகனை கொல்லத் துணிந்த ஈரான்”…. உலகையே உலுக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on ஆவணி 25, 2026

Spread the love

ஈரான் தனது மகன்களில் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சி செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய செய்திச் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நம்பவே முடியாத சில சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், தனது குடும்பத்தினரைக் குறிவைத்து ஈரான் இத்தகைய கொடூரத் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தச் சதித் திட்டம் எப்போது தீட்டப்பட்டது, எந்த இடத்தில் வைத்து இக்கொலை முயற்சி நடத்தப்பட்டது என்பது குறித்தான கூடுதல் தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. மேலும், இத்தாக்குதல் முயற்சி எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் நெதன்யாகு இரகசியமாகவே வைத்துள்ளார். தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக விரிவான தகவல்களை அளிக்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

   

பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அவ்னீர் மற்றும் யாயிர் என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இதில் யாரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டது என்பதையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. இவரது மூத்த மகன் யாயிர் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் மியாமி நகரில் வசித்து வருகிறார், அவருக்கு இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ (Shin Bet) பாதுகாப்பு அமைப்பு பலத்த பாதுகாப்பு வழங்கி வருகிறது. இளைய மகன் அவ்னீர் பெரும்பாலும் இஸ்ரேலிலேயே வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

எதிர்க்கட்சித் தலைவர் காடி எய்சென்கோட்டிற்கு பாதுகாப்பு அளிக்க ‘ஷின் பெட்’ மறுத்ததாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. தனது குடும்பத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஆடம்பரமானது அல்ல, மாறாக உண்மையான அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அவசியமானது என்பதை நியாயப்படுத்தும் வகையிலேயே அவர் இந்த விவகாரத்தைப் பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.