நடிகை தர்ஷா குப்தாவுக்கு சிக்கல்… 12 பேருக்கு கைது பிடிவாரண்ட்…? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

By Devi Ramu on ஆவணி 25, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசி சிறுவர்களைச் சீரழிப்பதாகக் கூறி, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீதும் சேலம் சைபர் கிரைம் பொலிஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அவர்கள் 12 பேரையும் கைது செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளைச் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.