வியட்நாமைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர், தனது உயிருக்கு உயிரான காதலியான தோ (24) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அவரது மனைவிக்குக் கடுமையான நுரையீரல் காசநோய் ஏற்பட்டது. உடலளவில் மிகவும் பலவீனமடைந்த தோ, முழுமையாகப் படுக்கையில் வீழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும், அவரது கணவர் தளர்ந்து போகாமல், மனைவியின் எஞ்சிய உணவையே உண்டு, அவரை ஒரு நொடியும் பிரியாமல் இரவு பகலாகப் பராமரித்து வருகிறார்.
மனைவியின் மருத்துவச் சிகிச்சைகளுக்காகத் தன்னிடம் இருந்த பணமனைத்தும் தீர்ந்துபோன நிலையில், தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற உதவி கோரி சமூக வலைதளங்களில் நிதி திரட்டி வருகிறார். நோயிலும் மாறாத இவர்களது தூய்மையான அன்புச் சம்பவம் உலகளவில் இணையவாசிகளின் நெஞ்சை நெகிழ வைப்பதாக அமைந்துள்ளது.
