ஐயோ கடவுளே… என்னால முடியல… 5-வது மாடியில் இருந்து குதித்து… இளம்பெண் தற்கொலை செய்த கொடூரம்… பின்னணி என்ன?… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 25, 2026

Spread the love

கே.பி.எச்.பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 6-வது பேஸ் பகுதியில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பஞ்சமதி அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாடியில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பெயர் சீதா புருஷோத்தம் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த சில காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே.பி.எச்.பி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.