BREAKING: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்… பள்ளிகளில் இனி மாதம்… ஒரு நாள் No Bag Day… அமைச்சர் உத்தரவு…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் ‘No Bag Day’ அனுசரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து, கற்றலை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதனுடன் சேர்த்து மேலும் பல முன்னோடித் திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்குச் சீருடையுடன் இனி Sports jersey வழங்கப்படும் என்றும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தொடர்ச்சியான பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் 2027 – 28 கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பேரவையில் விரிவாக விளக்கமளித்துள்ளார்.