“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “தமிழ்நாடு அரசியலில் மதிமுக போல் அதிமுக மாறிவிடும்” என்ற செங்கோட்டையனின் கருத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அவர், தவெக தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என எச்சரித்துள்ளார்.

மேலும், திராவிட இயக்கத்தின் போர்வாளான வைகோ கடந்த 32 ஆண்டுகளாக லட்சியப் பாதையில் மதிமுகவை உறுதிபட வழிநடத்தி வருகிறார் என்றும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் இயக்கமாகவே மதிமுக திகழ்கிறது என்றும் தனது அறிக்கையில் செந்திலதிபன் சுட்டிக்காட்டியுள்ளார்.