மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், பொதுமக்கள் சற்றும் எதிர்பார்த்திடாத வகையிலான பயனுள்ள அறிவிப்பு குறித்து முதல்வருடன் ஆலோசித்துவிட்டு விரைவிலேயே தெரிவிக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மகளிருக்கான உரிமைத் தொகையை உயர்த்துவது தொடர்பான சர்ப்ரைஸ் அறிவிப்பை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
