அடுத்த அதிரடிக்கு தயாராகும் விஜய்?… தமிழகத்தில் சிங்கப்பூர் சட்டம் வருமா?… சோஹோ ஸ்ரீதர் வேம்பு போட்ட எக்ஸ் பதிவு… முதல்வர் விஜய்க்கு கோரிக்கை…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெருமளவிலான ஊழல் குற்றங்களை முற்றிலுமாக ஒடுக்க, சிங்கப்பூர் நாட்டைப் பின்பற்றி மரண தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையான சட்டங்களை ஈவிரக்கமின்றி அமல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்த சிங்கப்பூர் நீதிமன்றங்களின் திறமையான செயல்பாடுகளை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, நிர்வாகத்தில் நேர்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். கடந்த காலத் தவறுகளைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து அவற்றுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிவிட்டு, முறையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இனிவரும் காலங்களில் நடக்கும் குற்றங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம் என அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் கொள்கைகளைத் தாம் தீவிரமாகப் பின்பற்றுவதாகவும், அவரது சீரிய அணுகுமுறைகளை ஆராய்ந்து கற்பது தற்போதைய ஆட்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார்.