“இங்கேயே இரு, வந்துடுறேன்”… 6,500 அடி ஜப்பான் மலையில் 7 வயது மகனை தவிக்கவிட்டுச் சென்ற கொடூர தந்தை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

ஜப்பானின் புகழ்பெற்ற மவுண்ட் ஃபுஜி மலையின் 6,500 அடி உயரப் பகுதியில், “இங்கேயே காத்திரு, இதோ வந்துவிடுகிறேன்” என்று கூறிச் சென்ற தந்தை 8 மணி நேரத்திற்கும் மேலாகத் திரும்பி வராததால், அவருடைய சிறு வயது மகன் கடும் குளிரிலும் தனிமையிலும் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், தனியாக அழுதுகொண்டிருந்த சிறுவனைக் கண்டு மீட்டு உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆபத்தான மலைப்பகுதியில் பிஞ்சுக் குழந்தையை இப்படிப் பரிதவிக்க விட்டுச் சென்ற தந்தையின் பொறுப்பற்ற செயல், மனிதநேயமற்றது எனக் கடுமையான விமர்சனங்களையும், பெற்ற பிள்ளைக்கே இந்த நிலையா என்ற பெரும் அதிர்ச்சியையும் உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.