நள்ளிரவில் பயங்கரம்…! ஹாஸ்பிடல் ICU-வில் தீ விபத்து… வார்மர் இயந்திரம் வெடித்து 3 குழந்தைகள் படுகாயம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் ஆகஸ்ட் 22 நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புதிதாக பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்காக வார்மர் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ஹீட்டிங் யூனிட்டின் ஃபிலமென்ட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமான தீப்பொறி விபத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தீ விபத்தில் வார்மருக்குள் இருந்த மூன்று பிறந்த குழந்தைகளும் பலத்த தீக்காயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிந்த்வாராவில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாததால், காயமடைந்த குழந்தைகள் இரு மருத்துவர்களின் கண்காணிப்பில் ஜபல்பூருக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அக்குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.