எ.வ.வேலு, KKSSR-க்கு ரெட் கார்ட்?…. ஒரே முடிவால் காலியாகும் சீனியர்களின் பதவிகள்…. அறிவாலயத்தில் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

திமுகவில் கட்சி நிர்வாகிகளின் பதவிகளுக்கு வயதுக் கட்டுப்பாடு குறித்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பல மூத்த மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சு.முத்துசாமி போன்ற கட்சியின் தூண்களாகத் திகழும் முக்கிய தலைவர்கள் தங்கள் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை இழக்கக்கூடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத் தீர்மானங்களில், பதவியை இழக்கும் இந்த மூத்த மா.செ.,க்களுக்கு மாற்றாக மாநில அளவில் என்ன மாதிரியான புதிய பொறுப்புகள் அல்லது முக்கியத்துவங்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் குறிப்பிடப்படாதது, கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.