என்ன CM சார் இதெல்லாம்?…. விஜய்க்கு வந்த புதிய சிக்கல்…. செம கடுப்பில் கூட்டணி கட்சிகள்…. முதல்வருக்கு எதிராக கிளம்பிய புதிய நெருக்கடி….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

சென்னையை அடுத்த தையூர் பகுதியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரவீன் (22) என்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலும், அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை என்பவரின் மகளை பிரவீன் காதலித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிரவீனின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்ததால், “குடும்பக் கௌரவம்” பாதிக்கப்படும் எனக் கூறி கூலிப்படையை ஏவி இக்கொடூரத்தைச் செய்ததாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

   

தமிழக வெற்றிக் கழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, ஆணவக்கொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள சூழலில், அதே கட்சியின் நிர்வாகியே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் முரண்நகையாக மாறியுள்ளது. இதனால், “ஆணவக்கொலைகள் மற்றும் சாதியப் போக்குகளைக் கட்சி உண்மையில் எதிர்க்கிறதா அல்லது இது வெறும் அரசியல் விளம்பரம்தானா?” என்ற கேள்விகளை பல்வேறு தரப்பினரும் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தவெகவின் கொள்கைப் பரப்புரைக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

   

ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கமாக இருக்கும் இடதுசாரி இயக்கங்கள், இச்சம்பவத்தைக் கண்டித்து ஆணவக்கொலைகளுக்கு எதிராக உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தீவிரமாக முன்வைக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்திலேயே இக்கோரிக்கை எழுப்பப்பட்டபோதிலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் இடதுசாரிகள் இப்போராட்டத்தைக் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல, ‘நீலம் பண்பாட்டு மையம்’ உள்ளிட்ட தலித் அமைப்புகளும் தவெக மற்றும் அரசுக்கு எதிரான தங்கள் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளன.

 

தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே இத்தகைய ஒரு சித்தாந்த மற்றும் நடைமுறைச் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய், இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி வலுத்துள்ளது. தவறிழைத்த நிர்வாகி மீது உடனடியாகக் கடுமையான கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்பாரா அல்லது இக்கோரிக்க அமைதியைக் கடைப்பிடித்து கிடப்பில் போடுவாரா என்பதை அரசியல் உலகம் உற்றுக் கவனித்து வருகிறது. ஏனெனில், இடதுசாரிகளும் தலித் அமைப்புகளும் இ விவகாரத்தில் லேசில் பின்வாங்குவதாக இல்லை.