“அமைச்சர்களுக்கு இணையான ஆடம்பர வசதியா…?” எம்எல்ஏக்களுக்கு இலவச கார் வழங்கிய அரசு…! சர்ச்சைகளுக்கு நடுவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் இலவசக் கார், ஓட்டுநர், வாகனப் பராமரிப்பு மற்றும் உதவியாளர் செலவுகளுக்காக மாதம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எளிய பின்னணியில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் தடங்கலின்றி மேற்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் மக்கள் வரிப்பணத்தில் இத்தகைய ஆடம்பர வசதிகள் தேவையா எனப் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்களுக்காக ஓடி உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே மனிதநேய அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், மேகதாட்டு விவகாரம் குறித்துப் பேசிய அவர், கர்நாடக அரசு மேகதாட்டில் ஒரு செங்கல்லைக் கூட நடத் தமிழக அரசு அனுமதிக்காது என்பதில் முதலமைச்சர் மிகத் தெளிவாக இருப்பதாகவும், தேனி மாவட்டத்தில் வட்டாட்சியர் சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் அவர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.