தெலுங்கானா மாநிலம் மஞ்சீரியல் மாவட்டத்தில் உள்ள லிங்காயப்பள்ளி பஞ்சாயத்து செயலாளர் ஜே.வரலட்சுமி, புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க ரூ.20,000 லஞ்சமாக கேட்டபோது, லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரிகளிடம் கச்சிதமாக சிக்கினார்.
பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வரலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். இதில் மற்றொரு பஞ்சாயத்து செயலாளரான லாவண்யாவின் தொடர்பும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பஞ்சாயத்து செயலாளர் வரலட்சுமியை, ACB அதிகாரிகள் கரீம்நகரில் உள்ள சிறப்பு ACB நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
