“பாடம் நடத்தாமல் லவ் பண்றாங்க சார்…” இரண்டு பேரும் கழிவறையில்….! நேரில் பார்த்த மாணவர்களை மிரட்டிய ஆசிரியர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 21, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சினந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஆசிரியர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறைக்கு வந்து முறைப்படி பாடம் நடத்தாமல், இருவரும் பள்ளி வளாகத்தில் நேரத்தைக் கழிப்பதாகவும், கழிவறைக்குள் ஒன்றாகச் சென்று காதலிப்பதாகவும் சிறுவர்கள் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர் தங்களை மிரட்டியதாகவும் குழந்தைகள் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்துக் கல்வித் துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் விசாரணை முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.