“எல்லாம் என் நேரம்பா…” விஐபி ரேஞ்சில் ரெஸ்ட் எடுத்த ஓட்டுநர்… அதிகாரியின் டிரைவருக்கு கால் மசாஜ் செய்த போலீஸ்… உ.பி-யில் வெடித்த பெரும் சர்ச்சை…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கடம்பூர் துணை மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீருடையில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர், படுக்கையில் ஓய்வாகப் படுத்திருந்த அதிகாரியின் ஓட்டுநருக்குப் பாதங்களை மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அரசுப் பணியில் உள்ள ஒருவர் இப்படித் தனிப்பட்ட சேவையில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கிளப்பியது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அரசுச் சீருடை மக்களின் பொதுச் சேவைக்கானதா அல்லது அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்குச் சேவை செய்வதற்கானதா என்ற விமர்சனம் இணையவாசிகளால் பரவலாக முன்வைக்கப்பட்டது. சர்ச்சையின் எதிரொலியாகச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஊர்க்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், அதிக வெப்பம் காரணமாக ஓட்டுநர் திடீரென மயக்கமடைந்ததாலேயே முதலுதவிக்காக அவரது கால்கள் அழுத்தி விடப்பட்டதாகத் துணை மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.