“ஒரே வாரத்தில் தலைகீழ் மாற்றம்”…. அமித்ஷா முன்னிலையில் அப்படியே மாற்றிப் பேசிய முதல்வர் விஜய்….. பரபரப்பை கிளப்பிய தராசு ஷ்யாம்….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் அண்மைய கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆகவே தொடர வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சமீபத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பேசிய முதல்வர் விஜய், மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் குறையாத வகையில் சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை தீர்மானத்தின் நிலைப்பாட்டிற்கும் மாநாட்டில் அவர் பேசியதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்பது ஒரு நிலைப்பாடு என்றால், நேர்மையான முறையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பது மற்றொரு நிலைப்பாடாக உள்ளது. அதேவேளையில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்ற மூன்றாவது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 543 என்ற எம்பிக்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில், மாநாட்டில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு இதற்கு நேர்மாறாக அமைந்திருப்பதாகப் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

   

மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் மாறக்கூடாது என்று முதல்வர் விஜய் கூறியிருப்பது, மறைமுகமாக நேர்மையான தொகுதி மறுவரையறையை வலியுறுத்துவது போல் உள்ளது என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கேற்ப எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் உயரும் சூழல் உருவாகும். 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை செய்யாமல் தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று தெளிவாகக் வலியுறுத்தாத வரை, தமிழக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்ற கருத்து நிலவுகிறது.

   

முதல்வர் விஜய்யின் இந்தத் தலைகீழ் மாற்றச் கருத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியிலும், கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக முதல்வர் பேசியிருப்பது, சட்டப்பேரவை மரபுகள் மற்றும் உரிமை மீறல் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இவிகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடும் என்பதால், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசியலில் மீண்டும் காரசாரமான விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.