அடுத்த பரபரப்பு…. திமுகவில் இருந்து விலகுகிறாரா செந்தில்பாலாஜி?…. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

அதிமுகவிற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இணைப்பதற்கான திரைமறைவு முயற்சிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது உள்ள பல்வேறு வழக்குகள் காரணமாக அவரைத் தொடர்ந்து ஆதரிப்பதில் திமுக தலைமைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அவர் ஓரங்கட்டப்படக் கூடும் என்ற கணிப்பில் எடப்பாடி பழனிசாமி அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகவும் பேசப்படுகிறது.

மேலும், கொங்கு மண்டலத்தில் தமக்குச் சவாலாக விளங்கும் எஸ்பி வேலுமணியின் செல்வாக்கைக் குறைத்து, அவரை முழுமையாக ஓரங்கட்டுவதற்குக் கொங்குப் பகுதியில் வலுவான பின்னணி கொண்ட செந்தில் பாலாஜியின் சேர்க்கை கைக்கொடுக்கும் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.