இந்தூரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவில் தனது குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவரின் பர்ஸ் திருடு போயுள்ளது. அந்த பர்ஸில் ஐபோன் சார்ஜர் இருந்த நிலையில், போனில் 1% சார்ஜ் மட்டுமே இருந்ததால் அதுவும் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தும் உரியப் பதில் மற்றும் நடவடிக்கை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஆத்திரத்தில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். பர்ஸ் திருடுபோனது தீவிரமான பிரச்சினை தான் என்றாலும், அதற்காக ரயில்வேயின் பொதுச் சொத்தை சேதப்படுத்திய அந்தப் பெண்ணிற்கு உரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், அதே சமயம் ஆர்.பி.எஃப் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
