உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள மடௌலி சாலையில், சச்சின் என்ற டெலிவரி ஊழியர் வாடிக்கையாளருக்குப் பொருளை டெலிவரி செய்யச் சென்று கொண்டிருந்த போது இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. பயணத்தின் போது அவரது செல்போனுக்கு வந்த அழைப்பை ஏற்பதற்காகப் பாக்கெட்டிலிருந்து போனை வெளியே எடுத்துப் பேச முயன்ற நொடியில், எதிர்பாராத விதமாகச் செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த கொடூர விபத்தில் சச்சினின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மீட்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெடித்துச் சிதறிய செல்போன் மோட்டோரோலா நிறுவனத்தைச் சேர்ந்தது எனக் கூறும் சச்சினின் குடும்பத்தினர், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
