“அய்யோ… என்னை யாரோ தள்ளிவிட்டாங்க… படிக்கட்டில் பெண்ணை வீழ்த்திய அரூப சக்தி?… AI மாயமா… பேய் வேலையா?… இணையத்தில் அதிர்ச்சி வீடியோ…!”

By Swetha on ஆவணி 20, 2026

Spread the love

எகிப்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சசிடிவி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் கட்டிடத்தின் படிக்கட்டுகளில் சாதாரணமாக இறங்கி வரும்போது, எதிரே ஒரு பூனை கடந்து செல்கிறது. பூனை அவரையொட்டிச் சென்ற அடுத்த சில வினாடிகளில், யாரோ பிடித்துத் தள்ளியது போல அந்தப் பெண் திடீரெனப் படிக்கட்டில் பயங்கரமாகக் கீழே விழுகிறார். ஆனால், அந்தப் பெண்ணின் அருகில் வேறு எந்த மனிதரும் இல்லை என்பதால் இந்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் இதை அரூப சக்தி அல்லது பேய் போன்ற துர்சக்திகளின் செயல் என்று கூறி அஞ்சுகின்றனர். பூனைகள் இதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத சக்திகளை உணரும் திறன் கொண்டவை என்றும், அதனாலேயே இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் சிலர் தங்களது விசித்திரமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

   

https://www.instagram.com/reel/DcL71_ZKwkI/?utm_source=ig_web_button_share_sheet

   

மறுபுறம், பெரும்பான்மையான இணையதளப் பயனர்கள் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் உண்மை கண்டறியும் சோதனைகளிலும் இது AI தொழில்நுட்பம் அல்லது கணினி எடிட்டிங் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.