ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டின் நடுவே காரின் கதவைத் திறந்து இருவரும் உள்ளே ஏறியுள்ளனர். பின்னர், கதவு மூடியதும் கார் தானாகவே பூட்டிக்கொண்டதால், காற்றுப் புழக்கம் இன்றி மூச்சுத்திணறி இரு பிஞ்சு உயிர்களும் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்தச் சம்பவத்தின் மிகவும் சோகமான பின்னணி என்னவென்றால், அந்தச் சிறுமிகளின் தாய் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தாயை இழந்த பிறகு, அந்தத் தந்தை தன் இரண்டு பிஞ்சு மகள்களையே தன் முழு உலகமாகக் கருதி வாழ்ந்து வந்தார். அவர்களைத் தாங்கிப் பிடித்து, ஆசையோடு வளர்த்து, அவர்களுடன் வாழப் பல கனவுகளைக் கண்டிருந்தார்.
https://twitter.com/MandeepRajBhar9/status/2089999974318956688/video/2
ஆனால், எதிர்பாராமல் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தால், அவர் தன் உயிராக நேசித்த இரண்டு மகள்களையும் ஒரே நாளில் என்றென்றுமாக இழந்து நிற்கிறார். ஒரு நொடியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம், அந்தத் தந்தையின் வாழ்க்கையையே உலுக்கி, ஈடு செய்ய முடியாத பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
