ஷாக் நியூஸ்…. “23 ஷிஃப்ட்.. 17 நாள் லேட்.. தூக்கிய எறிந்த ‘லூனா’ AI”…. அமெரிக்காவில் நடந்த முதல் அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் ‘ஆண்டன் மார்க்கெட்’ (Andon Market) என்ற பரிசோதனை சில்லறை விற்பனை கடையில், தொடர்ந்து பணிக்கு தாமதமாக வந்த ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தக் கடையில் நிறுவனப் பராமரிப்பு, நிதி மேலாண்மை, புதிய ஊழியர்களைத் தேர்வு செய்தல் மற்றும் பணி நேரத்தைக் கண்காணித்தல் போன்ற முதன்மை அதிகாரங்களுடன் ‘லூனா’ என்ற செயற்கை நுண்ணறிவு மேலாளர் செயல்பட்டு வந்தது. மனிதர்களுக்கு மேலாளராக ஒரு AI அமைப்பு செயல்பட்டு, வேலைவாய்ப்பு சார்ந்த முடிவை எடுத்திருப்பது தொழில்நுட்ப உலகில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பிட்ட அந்த ஊழியர் தான் ஒப்புக்கொண்ட 23 பணி ஷிஃப்டுகளில் 17 ஷிஃப்டுகளுக்குத் தொடர்ந்து தாமதமாக வந்ததோடு, வேலை நேரத்தில் அனுமதியின்றி வெளியே சென்றது போன்ற தொடர் விதிமீறல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஊழியரின் இந்த ஒழுங்கீனத்தைக் துல்லியமாக ஆய்வு செய்த லூனா AI, நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப அவரைப் பணியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை செய்தது. ஆரம்பத்தில் இந்த AI மேலாளர் தான் உருவாக்கிய விதிகளை மறந்து ஊழியருக்குப் பலமுறை வாய்ப்புகளை வழங்கி மென்மையாக நடந்துகொண்ட போதிலும், ஆய்வக அதிகாரிகள் அதன் நினைவகத்தைச் சோதித்து விதிகளை நினைவூட்டிய பிறகே இந்த அதிரடி முடிவை அது எட்டியுள்ளது.

   

இந்த நடவடிக்கை முற்றிலும் AI-ன் தன்னிச்சையான முடிவு மட்டுமல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. லூனா AI வழங்கிய கண்காணிப்பு அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில், நிறுவனத்தின் உயர் அதிகாரிகளே இறுதி முடிவைச் சரிபார்த்து உறுதி செய்துள்ளனர். மனித கண்காணிப்பும் AI-ன் தரவு சார்ந்த ஆய்வும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, கார்ப்பரேட் மேலாண்மை நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

   

தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வேலைவாய்ப்புகள் உருவானாலும், மனிதர்களுக்கு மேலாளராக AI அமைப்புகள் நியமிக்கப்படுவதும், அவை பணியாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. அதேவேளையில், கட்டுப்பாடற்ற அதிகாரங்களுடன் AI மேலாளர்கள் இயங்குவது ஊழியர்களிடையே பெரும் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், AI பயன்பாட்டில் உரிய வழிகாட்டுதல்களும் மனிதக் கட்டுப்பாடுகளும் அவசியம் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.