பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்?… உண்மையை உடைத்த சரத்குமார்… சற்றுமுன் பரபரப்பு பதிவு….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

பாஜகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப்போவதாகத் தன் மீது வெளியான ஊகங்களுக்கு மத்தியில், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவு அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பதிவின் மூலம் கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்கு அவர் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதும் வேளையில், புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. தொடர்ந்து அக்கட்சியில் அவருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படாதது ஏன் என அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.