FLASH NEWS: தங்க சுரங்கத்தில் பேரழிவு…. கொத்தாக புதையுண்ட 30 தொழிலாளர்கள்…. காலையிலேயே நெஞ்சை பதறவைக்கும் சோகம்….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நனா-மாம்பேரே மாகாணத்தின் ஹப்பா பகுதியில் இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாறைகள் மற்றும் மண்ணுக்குள் புதையுண்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் பல மணிநேரம் தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், இந்த கொடூர விபத்தில் 30 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் சடலமாகக் கைப்பற்றப்பட்டன.

இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுரங்கத்தின் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போதுமான பாதுகாப்பு உபகரணங்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத காரணத்தால், இது போன்ற விபத்தான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.