இத்தாலிக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்க வாலிபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கென்னஸ் நகரைச் சேர்ந்த 29 வயதான சிஸ்லி என்ற இளைஞர், இத்தாலியிலுள்ள புகழ்பெற்ற மவுண்ட் எடனா எரிமலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் எரிமலை மீது ஏறிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் திடீரென வானிலை மாறிக் கடும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த சக்திவாய்ந்த மின்னல் சிஸ்லியைத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிஸ்லியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவக் குழுவினர் அவருக்குப் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அன்று இரவு 10 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இயற்கையின் திடீர் மாற்றத்தால் நேரிட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
