“என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு”… புதிய அமைச்சர்களின் கமிஷன் லீக்ஸ்… விஜய்க்கு அண்ணாமலை வைத்த செக்…. அரசியலில் திடீர் பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது சுதந்திர தின உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இந்த நடவடிக்கை மற்றொரு பெரிய சுதந்திரப் போராட்டத்திற்குச் சமம் என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் லஞ்சத்திற்கு எதிராகச் சிறிதும் சகித்துக்கொள்ளாத மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், முதலமைச்சர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களின் ஊழியர்களே தவிர ஆட்சியாளர்கள் அல்ல என்றும், வாக்களிப்பதோடு கடமை முடிந்துவிடாமல் ஊழலுக்கு எதிரான இந்த மிஷனில் பொதுமக்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், முதலமைச்சரின் இந்த லஞ்ச ஒழிப்பு உரையைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தும் வகையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஒரு வெடி குண்டை வீசியுள்ளார். “புதிய அமைச்சர்கள் சிலர் அரசு ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர்; அதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது” என அண்ணாமலை பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். புதிய அமைச்சர்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் அந்த ஆடியோ ஆதாரத்தை வெளியிட நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆரம்பகட்டத்திலேயே இதற்குக் கடிவாளம் போடாவிட்டால், இது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் முடக்கி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.