“என் மூடை கெடுத்துட்ட”…. தேனிலவில்திடீரென வந்த மாதவிடாய்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மனைவி…!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது லட்சக்கணக்கில் பணமும், சொகுசு காரும் வரதட்சணையாக வழங்கப்பட்டபோதிலும், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர். இச்சூழ்நிலையில், திருமணத்திற்குப் பிறகு தம்பதியினர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குத் தேனிலவு சென்றுள்ளனர்.

அங்கு எதிர்பாராதவிதமாக அப்பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு, கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். இதைக் கண்டு பரிவு காட்டுவதற்குப் பதிலாக, தேனிலவு கொண்டாட்டத்திற்கு மாதவிடாய் தடையாக அமைந்துவிட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த கணவர் நிகில் மிஸ்ரா, மனைவியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக, விடுதி ஊழியர்களின் உடனடித் தலையீட்டினால் அப்பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

   

தேனிலவு முடிந்த பிறகும் கொடுமைகள் குறையவில்லை. டெல்லிக்குத் திரும்பிய பின்னரும் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோரால் அப்பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இறுதியில், திருமணமான 45 நாட்களிலேயே அவர் வீட்டை விட்டு விரட்டப்பட்டார். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் நேரடி தலையீட்டிற்குப் பிறகே கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.