மங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல துரித உணவகமான கே.எஃப்.சி கிளை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இணையம் வாயிலாக உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அழுகிய நிலையிலும் கடும் துர்நாற்றத்துடனும் சிக்கன் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த அதிரடி நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது சமையலறை, பொருட்கள் இருப்பு அறை மற்றும் குளிர்பதனக் கிடங்கு ஆகிய பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த உணவகத்தின் கிடங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்து சில உணவு மாதிரிகளை சேகரித்து தரம் குறித்து பகுப்பாய்வு செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே சம்பந்தப்பட்ட உணவகம் மீது அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
