அச்சச்சோ… உடம்பு இப்படி இளைச்சிடுச்சே… என்னாச்சு?… ஒசெம்பிக் வதந்திக்கு நடிகர்… கொடுத்த மாஸ் பதிலடி…!

By Swetha on ஆவணி 16, 2026

Spread the love

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சோஹைல் கான் (55), ‘தி அலையன்ஸ்’ நிகழ்ச்சியின் பார்ட்டியில் கலந்துகொண்டபோது, அவருடைய உடல் எடை கணிசமாகக் குறைந்து மிகவும் ஒல்லியாகக் காணப்பட்டார். சோஹைலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவருடைய ஆரோக்கியம் குறித்து ரசிகர்கள் கவலையும் சந்தேகமும் அடைந்தனர். மேலும், அவர் உடல் எடையைக் குறைக்க ‘ஒசெம்பிக்’ போன்ற மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பல விகடமான கருத்துகளும் வதந்திகளும் பரவின.

இந்த வதந்திகளுக்குப் பதிலளித்த சோஹைல் கான், தான் எடையைக் குறைக்க ‘ஒசெம்பிக்’ அல்லது எந்தவிதமான கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளையும் பயன்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ‘தி அலையன்ஸ்’ நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராகப் பங்கேற்ற முதல் வாரத்திலேயே, தனக்கு வயிற்று உபாதை மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

   

https://www.instagram.com/reel/Db0UNY2sMrg/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்த உடல்நலக்குறைவு காரணமாக, நிகழ்ச்சியின் சவால்களில் தொடர்ந்து பங்கேற்க உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சரியான உணவுக்கட்டுப்பாடு மற்றும் மக்கள் அளித்த அன்பின் காரணமாகவே உடல் எடை குறைந்ததே தவிர, எந்தவித மருந்துகளினாலும் அல்ல என்று கூறித் தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.