திக் திக்…! பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி… பாலியல் வன்கொடுமை… வசமாக சிக்கிய 17 வயது சிறுவன்… விரட்டி பிடித்த போலீஸ்…!!

By Gayathri on ஆவணி 15, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஒரு மலைக் கிராமத்தில், அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீடு திரும்பிய அந்தச் சிறுமி, மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பின் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாகத் தேடி வந்தனர். கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாடு மேய்க்கும் சிறுவன்தான் இக்குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுவனை உடனடியாக கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.