ஒடிசா மாநிலம் சிமிலிகுடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயதான அலு மீனா என்ற இளம் பெண் திடீரென காணாமல் போனார். அவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து எழுந்த தகராறைத் தொடர்ந்து, அவர் மாயமானதால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த ஒடிசா போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு அலு மீனாவின் காதலனான 35 வயது மோகன் கில்லோ என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
காவல்துறையினரின் தீவிர விசாரணையின் போது, மோகன் கில்லோ அலு மீனாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த அலு மீனாவிற்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்தது. ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலத்திற்குட்பட்ட மருப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பெண்ணைக் கொலை செய்து உடலைப் புதைத்ததாகக் குற்றவாளி வாக்குமூலம் அளித்தார்.
எதிரி அளித்த தகவலின் அடிப்படையில் ஒடிசா மாநிலப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கஜபதிநகரம் காவல்துறையின் உதவியுடன், புதைக்கப்பட்ட அலு மீனாவின் உடலைத் தோண்டி எடுத்து மீட்டனர். காதல் தகராறு காரணமாகக் காதலனே கர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்து உடலை அண்டை மாநிலத்தில் புதைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
