ஐயோ ஏன் பையன் போய்ட்டான்…! கேண்டீன் உணவால் பறிபோன உயிர்… முதலுதவி கூட செய்யாத பள்ளி நிர்வாகம்… மகனின் உடலைப் பார்த்து கதறும் பெற்றோர்…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த 17 வயதுடைய பிரின்ஸ் சோனி என்ற மாணவன், கடந்த புதன்கிழமையன்று பள்ளி உணவகத்தில் உணவு அருந்தியுள்ளார். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவர் பள்ளி வளாகத்திற்குள்ளேயே திடீரென சுருண்டு விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்காமல், பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு மட்டுமே தகவல் தெரிவித்து பள்ளியிலேயே காலதாமதம் செய்துள்ளது. பதறியடித்துக்கொண்டு பள்ளியை அடைந்த பெற்றோர், தங்கள் மகனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவனின் திடீர் மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.