“அடச்சீ… நீயெல்லாம் மனுஷனாடா?… சிறுவன் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்று வீசிய ஓட்டுநர்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!”

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில் சிறுவன் ஒருவன் மிதிவண்டி ஓட்டிச் சென்றபோது, வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், அச்சிறுவனை சில மீட்டர்கள் தூரம் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த சிறுவனை வீதியோரத்திலேயே விட்டுவிட்டு, காரை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   

https://twitter.com/HateDetectors/status/2088209988548477012/video/1

   

இந்த அதிர்ச்சி கரமான சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுவனின் தற்போதைய நிலை மற்றும் தப்பியோடிய ஓட்டுநர் குறித்த மேல்விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.