கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள மலை கிராமம் ஒன்றில், பள்ளியிலிருந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது மாணவியை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, 1098 என்ற உதவி எண் மூலமாகத் தகவல் அளிக்கப்பட்டது. உடனே மீட்கப்பட்ட சிறுமிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இக்குற்றச் செயல் தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார், போக்சோ மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுத் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்வதற்காக காவல் துறை சார்பில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
