காதல்னா இது தான்..! நிச்சயமான பெண் தற்கொலை… அடுத்த கணமே உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் அனுஸ்ரீ மற்றும் கண்ணூரைச் சேர்ந்த அமல் ஆகிய இருவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமாகி, வருகிற டிசம்பரில் திருமணம் நடைபெற இருந்தது. கர்நாடகாவின் ஹூன்சூரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்த அனுஸ்ரீ, திடீரென தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போன் மூலம் குடும்பத்தினர் பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்காததால், அக்கம்பக்கத்தினர் மூலம் விடுதியில் விசாரித்தபோதுதான் இந்த துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தனது வருங்கால மனைவியின் மரணச் செய்தியைக் கேட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அமல், அந்தப் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் விபரீத முடிவை நாடினார். எர்ணாகுளத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்த அவரும் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் தற்கொலைக்கான உண்மையான காரணங்கள் இதுவரை அறியப்படாத நிலையில், இரு மாநில காவல்துறையினரும் இதுகுறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.