“கொஞ்சம் நின்னா காப்பாத்தி இருக்கலாமே…” மின்னல் வேகத்தில் வந்த BMW கார்…! வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 13, 2026

Spread the love

டெல்லியின் மெஹ்ராம் நகர் பகுதியில் உள்ள சீப்ரா கிராசிங்கில் சாலையைக் கடக்க முயன்ற ஜெயவந்தி (48) என்ற வீட்டு வேலை செய்யும் பெண் மீது அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதிய உணவிற்காக வீட்டிற்குத் திரும்பிய போது நிகழ்ந்த இந்த கொடூர விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தீபக் (38) என்ற ஓட்டுநரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய பின் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்றாமல் ஓட்டுநர் தப்பியோடியதே அவரது இறப்பிற்குக் காரணம் எனக் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 செல்லும் சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் நடப்பதால் உடனடியாக வேகக் கட்டுப்பாடு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கப் பொலிஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.