சவுதி அரேபியக் கடற்பகுதியில் வழக்கம்போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது, கடந்த ஆகஸ்ட் 10 அன்று ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் மாவீரன் என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த மயிலாடுதுறை மாவட்டம் கீழமூவர்கரையைச் சேர்ந்த மேலும் மூன்று மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாவீரனின் உடலைத் தாய்நிலமான தமிழகத்திற்குக் கொண்டு வர தேவையான தூதரக நடவடிக்கைகளை மாநில அரசு விரைந்து மேற்கொண்டு வரும் நிலையில், கடல் எல்லையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பலமாக எழுந்துள்ளது.
