“அம்மா கூப்பிடுறாங்க போயிடலாம்”…. மறுத்த மனைவியைக் கொன்று தற்கொலை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர்… போனில் இருந்த செல்ஃபி வீடியோவால் அதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

தாயின் மறைவு தந்த தாங்க முடியாத துயரத்தால், திருப்பதியில் மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான லட்சுமண் ராவ் (32) மற்றும் சியாமளா (30) ஆகியோர் திருப்பதியில் வசித்து வந்தனர். லட்சுமண் ராவின் தாய் அண்மையில் காலமான நிலையில், தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். “அம்மா கனவில் வந்து என்னைக் கூப்பிடுகிறார், நாமும் அவரிடம் சென்றுவிடலாம்” என்று மனைவியிடம் கூறி லட்சுமண் ராவ் புலம்பியபோதெல்லாம், சியாமளா அவருக்கு ஆறுதல் கூறித் தடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கணவன்-மனைவி இருவருமே சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

   

வீட்டில் சோதனையிட்டபோது லட்சுமண் ராவின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த செல்ஃபி வீடியோ ஒன்று சிக்கியது. அதில், தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாகவும், அதற்கு மனைவி சம்மதிக்காததால் அவரைக் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் லட்சுமண் ராவ் பேசியிருந்தது தெரியவந்தது. மன அழுத்தத்தின் உச்சத்தால் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.