43 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கைகளைச் சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் எழுந்த உட்கட்சி மோதலின்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் குறிப்பிட்ட எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், காலப்போக்கில் ராஜினாமா செய்த 4 பேரைத் தவிர்த்து எஞ்சியவர்கள் மீதான தகுதிநீக்கக் கோரிக்கைகளை இரு தரப்பும் முறையாகத் திரும்பப் பெற்றன.
இதனையடுத்தே சபாநாயகர் அந்த நடவடிக்கைகளைக் கைவிடுவதாக அறிவித்த நிலையில், அதை எதிர்த்து ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில், சட்டமன்றச் சபாநாயகரின் இந்த முடிவில் தலையிடப் போதிய சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
