அய்யோ… என் கோபி வர்ற வரை எனக்கு சோறு வேண்டாம்… கண்டுபிடித்தால் ரூ 11 ஆயிரம் பரிசு… ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் பாசப் போராட்டம்…!

By Swetha on ஆவணி 11, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தன் மிஸ்ரா, தான் உயிருக்கு மேலாக வளர்த்து வந்த ‘கோபி’ என்ற கிளியை இழந்து தவித்து வருகிறார். சோஹாக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்காங்காமேளா மைதானம் அருகில் உள்ள இவரது வீட்டில் இருந்து கடந்த சனிக்கிழமை அன்று இந்தக் கிளி திடீரென காணாமல் போயுள்ளது.

காணாமல் போன செல்லக் கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு முதற்கட்டமாக ரூ. 11,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், தன் அன்பிற்குரிய கிளி திரும்பக் கிடைக்கும் வரை உணவருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்னாள் ராணுவ வீரர் சந்தன் மிஸ்ரா கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

   

ஒருபுறம் அறிவியல் பூர்வமான தேடுதல் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ஆன்மீக ரீதியாகவும் பறவையை மீட்க அவரது குடும்பத்தினர் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். வளர்ப்புப் பறவையின் மீது அவர் வைத்துள்ள இந்த அளப்பரிய பாசமும், அவரது கண்ணீர் போராட்டமும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.