உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புட், டேட்டிங் செயலிகளில் வெவ்வேறு பெயர்களில் போலி கணக்குகளைத் தொடங்கி ஆடவர்களிடம் பழகி வந்துள்ளார். இவர்களுடன் நெருக்கமாகப் பழகிய பிறகு, அவர்களை மிரட்டி பெருந்தொகையைப் பறிப்பதைப் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரின் இந்த மோசடி வலைக்கு பலர் இரையாகியுள்ளனர்.
இந்நிலையில், இவரது மிரட்டலுக்குப் பணியாமலும், அவர் கேட்ட பணத்தைக் கொடுக்க மறுத்தும் 5 நபர்கள் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பல்லவி, அந்த 5 பேரின் மீதும் காவல்துறையில் போலியான பாலியல் புகார்களை அளித்து, அவர்களை வழக்குகளில் சிக்க வைத்துள்ளார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பல்லவி அளித்த புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும், பணம் பறிப்பதற்காக அவர் தீட்டிய சதித்திட்டம் என்பதும் அம்பலமானது. அதைத் தொடர்ந்து, அப்பாவி நபர்களைப் பொய் வழக்கில் சிக்க வைத்த பல்லவி மீது காவல்துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்துள்ளனர்.
