ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தின் ஹனுமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவர் மயங்க். 11-ஆம் வகுப்பு படித்து வந்த இவர், எப்போதும் செல்போனில் தீவிரமாக விளையாட்டு விளையாடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர் நீண்ட நேரமாக செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மயங்க் தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியிருந்ததால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சவுத்மால், விளையாடுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். ஆனால், தந்தையின் பேச்சைக் கேட்காமல் மாணவர் தொடர்ந்து விளையாடியதால், கோபத்தில் தந்தை அவரிடமிருந்த செல்போனைப் பிடுங்கி வைத்துள்ளார்.
பெற்றோருக்கு ஒரே மகனான மயங்க், தந்தை செல்போனைப் பறித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் மன உளைச்சலிலும் தற்கொலை போன்ற விபரீதமான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதய நோயாளியான தந்தை சவுத்மால், மகனின் இந்த முடிவால் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளார்.
