பஞ்சாபின் குராலி பகுதியில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் ஒருவரை, ஒரு நபரும் அவரது குடும்பத்தினரும் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்கக் காவல்துறை மறுப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நியாயம் கோரியும், குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
https://twitter.com/rameshofficial0/status/2086798963731304934/video/1
இச்சம்பவம் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் கீழ் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிப்படுத்துவதாகக் கூறி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. செல்வாக்கு உள்ளவர்களுக்கு சாதகமாகப் பொலிஸார் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
