விசாகப்பட்டினத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனிடமிருந்து நாய்க்குட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்நகர் பகுதியைச் சேர்ந்த நந்து என்ற சிறுவன், வழக்கம் போல் காலையில் தனது வளர்ப்பு நாய்க்குட்டியை நடைப்பயிற்சிக்காக வெளியே அழைத்துச் சென்றுள்ளான். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் செய்த செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நந்து நாயுடன் சென்று கொண்டிருந்தபோது, எண்ணைக் பலகை இல்லாத இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் சிறுவனிடம் சென்று, நாய்க்குட்டியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், சிறுவன் அதற்குச் சம்மதிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், சிறுவன் என்றும் பாராமல் அவனைத் கீழே தள்ளிவிட்டு, நாய்க்குட்டியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
https://twitter.com/pulsenewsbreak/status/2086759132497866871/video/1
இந்தக் கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய அந்த இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
