“இறக்கிவிட மாட்டியா?”…. அரசு பஸ் முன் தொங்கியபடி பயணித்த நபர்.. கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… ஷாக்கிங் வீடியோ..!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து பன்னபள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், பாகலூரைச் சேர்ந்த பயணி ஒருவர் தும்மனப்பள்ளிக்குச் செல்வதற்காக ஏறியுள்ளார். தான் சேருமிடத்திற்கு முன்பாகவே தன்னை இறக்கிவிடுமாறு அந்தப் பயணி ஓட்டுநர் எம். ரமேஷ் குமாரிடம் கேட்டபோது, அதற்கு ஓட்டுநர் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக ஓட்டுநர் பேருந்தை நகர்த்த முயன்றபோது, அந்தப் பயணி பேருந்தின் முன்புறக் கண்ணாடியைப் பிடித்தபடி தொங்கியுள்ளார். பயணி உயிருக்குப் போராடும் வகையில் தொங்கிய நிலையிலேயே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சுமார் 500 மீட்டர் தூரம் இயக்கிச் சென்றுள்ளார்.

அங்கிருந்த சக பயணி ஒருவர் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தனது கைப்பேசியில் பதிவு செய்ய, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. பயணியின் உயிரைப் பணைய வைக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட ஓட்டுநரின் இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகார் மற்றும் வைரல் வீடியோவின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர், பேருந்து ஓட்டுநர் ரமேஷ் குமாரைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.