“அம்மா வலிக்குது…” கத்தி கதறி கூச்சலிட்ட சிறுவன்… தரதரவென இழுத்து சென்று கடித்து குதறிய நாய்கள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 10, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட சாதஹள்ளி பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஐந்து தெருநாய்கள் கொண்ட கூட்டம் திடீரெனக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. அந்த வெறிநாய்கள் சிறுவனைத் தரையில் தள்ளி, கத்திக் கதறக் கதறத் தொடர்ச்சியாகக் கடித்துக் குதறியுள்ளன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாய்களை விரட்டி அவரைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

https://twitter.com/HateDetectors/status/2086718630428041486

   

இந்தக் கொடூரச் சம்பவம் முழுமையாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சிக்கஜாலா காவல்நிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தெருநாய்களை உடனடியாகப் பிடித்து இதுபோன்ற ஆபத்துகளைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.