“48 மணிநேரத்தில் அதிரடி வேட்டை…. 837 பேர் கைது”… ‘மணி மியூல்’ ஆபரேஷனில் சிக்கிய பிரம்மாண்ட நெட்வொர்க்…. தமிழ்நாட்டை உலுக்கிய ரூ.545 கோடி சைபர் ஸ்கேம் பின்னணி…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

தமிழ்நாட்டில் சைபர் கிரைம் காவலர்கள் தீவிரமாக நடத்திய ‘மணி மியூல்’ சிறப்பு ஆபரேஷன் மூலம், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் ரூ.545 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய நிதி மோசடியைக் கண்டுபிடித்து 837 நபர்களைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அதிரடி சோதனையின் போது குற்றவாளிகளிடமிருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள், 114 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 73 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; இதன் மூலம் இணையவழி நிதி மோசடியில் பணத்தை இழந்து தவித்த பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களது தொகையை மீட்பதற்கான மிக முக்கிய வாய்ப்பும் நம்பிக்கையும் தற்போது கிடைத்துள்ளது.